2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

காணி உறுதிபத்திரங்கள் வழங்கிவைப்பு

Mithuna   / 2024 ஜனவரி 08 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் எஸ் எம் நூர்தீன் 

மண்முனைப்பற்று பிரதேசத்தில் காணி உறுதிப்பத்திரம் அற்றவர்களுக்கான காணி உறுதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.


மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு காணி உறுதிப் பத்திரங்களை வழங்கி வைத்துள்ளார்.

இதன்போது முதற்கட்டமாக 19 பயனாளிகளுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.



இந் நிகழ்வில் முன்னால் மாகாண சபை உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன், மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்
உள்ளிட்ட பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .