Princiya Dixci / 2021 ஜனவரி 06 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிருந்து “அசிஸ்” போதைபொருளை எடுத்துச் சென்ற காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த நபரொருவரை, மட்டக்களப்பு - நாவற்குடா பகுதியில் வைத்து இன்று (06) கைதுசெய்யப்பட்டுள்ளனர் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பிரதான வீதியைச் சேர்ந்த 38 வயதுடைய அந்நபர், தனிமைப்படுத்தப்பட்ட காத்தான்குடியில் இருந்து நாவற்குடா பிரதேசத்துக்குள் சென்றபோது, மாவட்ட புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, புலனாய்வுப் பிரிவினர், அந்நபரை வழிமறித்து சோதனையிட்ட போது, அவரிடம் இருந்து 10 கிராம் அசிஸ் போதைப்பொருளை மீட்கப்பட்டதுடன், அவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை, காத்தான்குடி பொலிஸாரிடம் புலனாய்வுக் பிரிவினர் ஒப்படைத்துள்ளதுடன், இவர் தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் மற்றும் போதைப்பொருள் தடுப்புச் சட்டம் ஆகிய இரு சட்டங்களுக்கு எதிராக நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
5 minute ago
11 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
28 minute ago