2025 மே 23, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியில் கல்வி எழுச்சி மாநாடு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியில் கல்வி எழுச்சி மாநாட்டை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.சபீல் நழீமி தெரிவித்தார்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கல்விக்குழு மற்றும் காத்தான்குடி மீடியா போரம் ஆகியவற்றுக்கிமையில் சம்மேளன அலுவலக மண்படத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சந்திப்பின் போது இத்தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இம்மாநாடு, காத்தான்குடி பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ளது.

காத்தான்குடியில் ஆண் மாணவர்களின் கல்வி வீழ்ச்சி மற்றும் ஆண் மாணவர்களை கல்வியின் பால் ஊக்கப்படுத்துதல், மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் கல்வி சார் அபிவிருத்தி போன்ற விடயங்கள் பற்றி விரிவாக ஆராயப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X