2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியில் கிருமி ஒழப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள், இன்று(2) முன்னெடுக்கப்பட்டன.

காத்தான்குடி நகரசபை, காத்தானகுடி பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்முதல் நடவடிக்கையாக, காத்தான்குடி பிரதான வீதியின் இரு பகுதிகளிலுமுள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்னால், கிருமி அழிக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டன.

இதில் காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மருந்து தெளிக்கும் நடவடிக்கை, தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாகவும் காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .