Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடியில் இன்று (26) அதிகாலை மர ஆலையொன்றில் ஏற்பட்ட தீ பரவலால் அம்மர ஆலை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
காத்தான்குடி மூன்றாம் குறிச்சி வாவிக்கரையோரம் உள்ள யு.எல்.அக்பர் என்பவருக்குச் சொந்தமான மரஆலையே தீப்பிடித்து எரிந்துள்ளது.
அதிகாலை 3.30 மணிக்கு தனது மர ஆலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்று பார்த்த போது, மர ஆலை எரிந்து கொண்டிருந்ததாக, அதன் உரிமையாளர் அக்பர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, பொதுமக்கள், பொலிஸாரின் உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும், மர ஆலை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், இங்கு வைக்கப்பட்டிருந்த பெறுமதியான மரங்களும் முற்றாக எரிந்துள்ளன. அத்துடன், மர ஆலைக்குள் இருந்த ஐந்து ஆடுகளும் கோழிகளும் எரிந்து, உயிரிழந்துள்ளதாகவும், உரிமையாளர் தெரிவித்தார்.
இந்தத் தீப் பரவலுக்கான காரணம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago