Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஜனவரி 25 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடியில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு காரணமாக இருந்த துப்பரவு செய்யப்படாத 24 வெற்றுக்காணிகளை, காத்தான்குடி நகர சபை சுவீகரித்துள்ளதாக, காத்தான்குடி நகர சபை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
காத்தான்குடி நகர சபை மற்றும் காததான்குடி சுகாதார வைத்தியர் அலுவலகம், காத்தான்குடி பிரதேச செயலகம் ஆகிய அலுவலகங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட டெங்கு பரிசோதனையின் போதே, இந்த காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு சுவீகரிக்கப்பட்டுள்ளன.
குறித்த காணிகளுக்கு, காத்தான்குடி நகர சபையால் சுவீகரிக்கப்பட்ட காணி என்ற விளம்பரப் பலகை போடப்பட்டுள்ளது.
இந்தக் காணிகளை, காணிச் சொந்தக் காரர்கள் 14 நாட்களுக்கு துப்பரவு செய்து மீண்டும் நகர சபைக்கு அறிவிக்கும் பட்சத்தில் அதிகாரிகள் அந்தக் காணியை பரிசோதனை செய்த பின்னர் காணியை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, காத்தான்குடி நகர சபை அதிகாரி மேலும் தெரிவித்தார்.
14 நாட்கள் கடந்து காணி துப்பரவு செய்யப்படாவிடின் காணியை முழுமையாக நகர சபை சுவீகரிப்பதுடன், நீதிமன்றத்தின் ஊடாக காணிச் சொந்தக்காரருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .