Princiya Dixci / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
பேலியகொட மீன் சந்தை கொரோனா வைரஸ் தொற்றுடன் தொடர்புடையதாக இனங்காணப்பட்ட வாழச்சேனையைச் சேர்ந்த மீனவர்களுடன் தொடர்பாளர்களாகக் காணப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் உள்ளடங்கலாக, காத்தான்குடியில் 27 பேருக்கு, இன்று (27) காலை பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட மாவட்டங்களில் இருந்து காத்தான்குடிக்கு வந்து, சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமைய சுய தனிமைப்படுத்தலில் இருந்தோருக்கும் இதன்போது பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த மாதிரிகள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, காத்தான்குடி சுகாதார அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
21 minute ago
27 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
27 minute ago
51 minute ago