Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி நகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி நிதித்துவம் நான்கு பேருக்கு சுழற்சிமுறையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக, பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
இதற்கான ஒப்பந்தம், நேற்று (09) இரவு கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கடந்த காத்தான்குடி நகர சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு ஓர் ஆசனம் கிடைக்கப் பெற்றது.
அதில் போட்டியிட்ட வேட்பாளர்களான ஏ.எம்.மாஹீர் என்பவர், முதல் வருடத்திலும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் கவிஞருமான ரீ.எல்.ஜௌபர்கான், இரண்டாம் வருடத்திலும் முகைதீன் சாலி மூன்றாம் வருடத்திலும் முஹம்மட் சப்ரி, நான்காம் வருடத்திலும் சுழற்சிமுறையில் உறுப்பினர்களாக காத்தான்குடி நகர சபைக்குத் தெரிவு செய்யப்படுவார்கள்.
இந்த வகையில், தற்போது முதல் வருடத்தில் ஏ.எம்.மஹீர், காத்தான்குடி நகர சபைக்கு உறுப்பினராக அக்கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான ஒப்பந்தத்தில் பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி முன்னிலையில் இதன் வேட்பாளர்கள் கையொப்பமிட்டனர்.
இந்த நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சட்டத்தரணி முஹம்மட் றூபி உட்பட காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago