Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 03 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
காத்தான்குடி நகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்) வெளிப்படைத்தன்மையற்றதாகக் காணப்பட்டதாலேயே, தமது கட்சி உறுப்பினர்கள் அதனை எதிர்த்து வாக்களித்ததாக, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித் தவிசாளரும் நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்ததார்.
குறித்த நிதியறிக்கைக்கு 13 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் 03 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருந்தனர்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அப்துர் ரஹ்மான் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அடுத்தாண்டுக்கான நிதியறிக்கையில் சில முக்கிய விடயங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டுமெனவும் தீர்வுகள் உள்வாங்கப்பட வேண்டுமெனவும் நாம் எழுத்து மூலமான கோரிக்கையை தவிசாளரிடம் முன்வைத்திருந்தோம். எனினும், அவை நிதியறிக்கையில் தெளிவுபடுத்தப்படவில்லை.
“குறிப்பாக, நகர சபையால் கொள்வனவு செய்யப்படவுள்ள காணிகள் தொடர்பில் போதிய தெளிவு இருக்கவில்லை. மூலதனச் செலவீனத்திலிருந்து 25 இலட்சம் ரூபாய் காணிக் கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
“அத்துடன், இம்முறை ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் எந்த நோக்கத்துக்காக, எவ்வளவு காணி கொள்வனவு செய்யப்பட வேண்டும் என்ற தெளிவான விவரம் உள்வாங்கப்பட வேண்டுமெனவும் காணிக் கொள்வனவில் வெளிப்படைத் தன்மையைப் பேணி முறைகேடுகளை இல்லாதொழிக்கும் முகமாக இதைக் கையாளுவதற்கு நகர சபையில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் உள்ளடக்கியதான குழுவொன்று அமைக்கப்படவேண்டும் எனவும் நாம் கோரியிருந்தோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago