Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Princiya Dixci / 2020 ஒக்டோபர் 11 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்
உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்குவதற்கெனக்கூறி, நகைக்கடை வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.சியாட், நேற்று (10) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார் என, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.
பிரதி பொலிஸ்மா அதிபருக்கு 05 இலட்சமும் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு 03 இலட்சமும் கொடுக்க வேண்டுமெனக் கூறி, 8 இலட்சம் ரூபாயையும் தனக்கு 25,000 ரூபாயுமென 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயை இவர் இலஞ்சமாகப் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
களவாடப்பட்ட நகைளைக் கொள்வனவு செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நகைக்கடை வியாபாரியைக் காப்பாற்றுவதற்கே, மேற்படி இத்தொகை வியாபாரியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
32 minute ago
1 hours ago
1 hours ago