Princiya Dixci / 2022 செப்டெம்பர் 22 , பி.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்
காத்தான்குடியில் உணவுத் தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகள், பேக்கரிகள் மற்றும் உணவு தயாரிக்கும் இடங்கள், இன்று (22) திடீர் சோதனைகள் செய்யப்பட்டன.
இதன்போது, மனித பாவனைக்குதவாத உணவுகள் காணப்பட்ட சில ஹோட்டல்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, அவைகளை சீர் செய்வதற்காக கால அவகாசமும் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுகுணன் தலைமையில், அவரது வழிகாட்டலில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் என 60 உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்த சோதனை நடவடிக்கை மாவட்டம் முழுவதும் மேற் கொள்ள நடவடிக்கை எடுகப்பட்டுள்ளதுடன், அதில் ஒரு கட்டமாக காத்தான்குடி சுகாதார அலுவலகப் பிரிவிலுள்ள உணவு தயாரிப்பில் ஈடுபடும் இடங்கள் சோதனை செய்யப்பட்டதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுகுணன் தெரிவித்தார்.
12 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
58 minute ago
1 hours ago