2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

காரியாலயங்களில் கை கழுவும் ஏற்பாடு

Editorial   / 2020 மார்ச் 19 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

கொரோனா உயிர்க்  கொல்லி வைரஸ் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையாக, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் கை கழுவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக, மாவட்டச் செயலக ஊடகப்பிரிவு அறிவித்தள்ளது.

பொதுநிர்வாக உள்நாட்டு உள்ளுராட்சி அலுவல்கள் மாகாண சபைகள் அமைச்சின் சுற்றுநிருபத்தின் பிரகாரம், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் அங்கு வருகை தரும் பொதுமக்கள் தமது கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வருகை தந்தை சகல வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் தமது கைகளை கழுவிய பின்னர் உள்ளே செல்லே அனுமதிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X