Editorial / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம் நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், க.விஜயரெத்தினம்
நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ், கிராமிய மட்ட உற்பத்தியாளர்களின் கண்காட்சி, மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று (07) நடைபெற்றது.
கிராம மட்ட சிறு உற்பத்தியாளர்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்துவருவதுடன், அவர்களுக்கான சந்தை வசதிகளையும் ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சிறு உற்பத்தியாளர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் ஆரம்பமான இந்தக் கண்காட்சியில், மட்டக்களப்பு மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக உதவி பிரதேச செயலாளர் திருமதி ல.பிரசாந்தன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் அ.சுதர்சன், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு மேற்பார்வை உத்தியோகத்தர் சி.வினோத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
6 minute ago
18 minute ago
23 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
23 minute ago
31 minute ago