Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 29 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. விஜயரெத்தினம், க.சரவணன்
மட்டக்களப்பு சீயோன் தேவாலயம், எதிர்வரும் டிசெம்பர் மாதம் கொண்டாடப்படவுள்ள கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னர், முழுயைமாக புனரமைக்கப்பட்டு, வழிபாடுகளுக்காக, பொதுமக்களிடம் கையளிக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு உள்ளான சீயோன் தேவாலயத்தை, இன்று (29) பார்வையிட்ட பின்னர், கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டில் பொதுமக்களையும் வணக்கஸ்தலங்களையும் பாதுகாப்பதில், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் முனைப்புடன் செயற்படுவதாகவும் இந்தத் தாக்குதல் காரணமாக, உண்மையான சமாதானம், அன்பு, கருணை, மரியாதை, நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவை, இனங்களுக்கிடையில் இல்லாமல் போயுள்ளது என்றும் கூறினார்.
குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும், சேதமடைந்த கட்டடங்கள், வர்த்தக நிலையங்கள் போன்றவற்றுக்கும் நட்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றும் இதை உறுதிப்படுத்தவே தான் இங்கு வந்ததாகவும் அவர் கூறினார்.
ஒரு குடும்பத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும், 1 மில்லியன் ரூபாய் வீதமும் காயமடைந்தவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் வரையிலும் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது என்றும் வெளிநாட்டவர்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் என இனங்காணப்பட்ட 189 பேருக்கு, 185 மில்லியன் ரூபாய் இதுவரை வழங்கப்பட்டுள்ளது என்றும் காயமடைந்த 403 பேருக்கு, 53 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
12 May 2025