2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிளினிக் நிலையத்தை உடைத்து திருட்டு

Editorial   / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் இயங்கி வரும் மீராவோடை குடும்ப நல உத்தியோகத்தர் (கிளினிக் நிலையம்) உடைத்து அதிலிருந்த பெறுமதியான எல்.ஈ.டி தொலைக்காட்சிப் பெட்டி திருடப்பட்டுள்ள சம்பவம், நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

கர்ப்பிணிகள், கிளினிக் வரும் குழந்தைகளுக்கு சுகாதாரப் பழக்கவழக்கங்கள் தொடர்பான ஒளிப்பதிவுக் காட்சிகளை காண்பிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டியே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X