2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கிழக்கில் டெங்கு அபாயம்

Niroshini   / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

கிழக்கில், டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன், அதனால், மக்கள் சுற்றுப்புறச் சூழல்களைச் சுத்தமாக வைத்திருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில், இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில், 281 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அதில்,  ஓட்டமாவடி பிரதேசத்தில் 114 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த வாரத்தில் மாத்திரம், ஓட்டமாவடி பிரதேசத்தில் 48 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், குறிப்பாக தேசிய டெங்கு தடுப்பு பிரிவினரின் ஆய்வின் படி, பெண்கள், சிறுவர்களே அதிகளவில் டெங்கு காய்யச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .