Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 08 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்தார்.
அதேவேளை, மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேசத்தில் ஒருவருக்கு, இன்று (08) கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டதன் அடிப்படியில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 61ஆக உயர்வடைந்துள்ளது.
ஏறாவூரில் முதலாவதாகத் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரின் தாயாருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
பெலியகொட மீன் சந்தைக் தொத்தனியையடுத்து, கோரளைப்பறறு மத்தியில் 42 பேரும், செங்கலடியில் ஒருவரும், கிரானில் ஒருவரும், வெல்லாவெளியில் ஒருவரும், பட்டிருப்பில் ஒருவரும். களுவாஞ்சிக்குடியில் ஒருவரும், காத்தான்குடியில் ஒருவரும், ஏறாவூரில் 7 பேரும், செங்கலடியில் ஒருவரும், மட்டக்களப்பில் 5 பேருமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
35 minute ago
52 minute ago