2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கிழக்கில் பிச்சை எடுத்த கொழும்பு ‘ஐஆர்சி’ சிக்கினார்

Editorial   / 2023 ஏப்ரல் 02 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

பிச்சைக்கார வேடம் பூண்டு மட்டக்களப்பு நகரில் துவிச்சக்கரவண்டியை திருடிச் சென்றவர், வௌ்ளிக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் பல குற்றங்கள் புரிந்து குற்றவாளியான  இவர், பொலிஸின் ஜஆர்சி பட்டியலில் உள்ள தெமட்டகொடையைச் சேர்ந்த ஒருவர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறிப்பட்டுள்ளது.  மட்டு பொதுச் சந்தை பகுதியில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார் .

பாடசாலை மாணவன், நகரில் மத்திய வீதியிலுள்ள உணவு கடை ஒன்றின் முன்னால் துவிச்சக்கரவண்டியை மார்ச் 22ஆம் திகதி நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று திரும்பிய போது 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான துவிச்சக்கரவண்டி திருட்டுபோயுள்ளது

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டடையடுத்து பொலிஸார் அந்த பகுதி வீதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்கள் மூலம் திருடனை தேடிவந்தனர்.  அதிலிருந்த காட்சிகளின் அடிப்படையிலே​யே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 கைது செய்யப்பட்டவர் கொழும்பில், ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, பொலிஸ் ஜஆர்சி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளவர் எனவும் தெரியவருகின்றது,

இவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று சனிக்கிழமை(01) ஆஜர்படுத்திபோது   எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .