2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கிழக்கு பரப்புரைக்கு ஜனாதிபதி, பிரதமர் இன்று படையெடுப்பு

Editorial   / 2018 ஜனவரி 30 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், பி.எம்.எம்.ஏ.காதர்

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாளை (31) பிற்பகல் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக, சம்பந்தப்பட்ட கட்சிகளின் முக்கியஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், ஜனாதிபதி நாளை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு  விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது, காத்தான்குடிக்கு பிற்பகல் விஜயம் மேற்கொண்டு விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

தொடர்ந்து மாலை, பெரியநீலாவணை வீசி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்து விசேட உரையாற்றவுள்ளார்.

மேலும், அம்பாறை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களிலும் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிற்பகல் 3 மணிக்கு மட்டக்களப்புக்கு விஜயம் செய்து, அங்குள்ள நகர தனியார் பஸ் நிலைய முன்றலில் இடம்பெறும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் சம்பந்தமான பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X