Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம், கனகராசா சரவணன்
ழக்கு மாகாணத்தை மய்யப்படுத்திய புதியதொரு பொருளாதார மேம்பாட்டுக்கான புரட்சியின் பங்காளிகளாக இருப்பதற்கு கிழக்கு மக்கள் எப்போதும் தன்னோடு இணைந்திருக்குமாறு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.
“இவ்வாறான பொருளாதாரப் புரட்சி கிடைப்பது பெரும் வாய்ப்பாகும்” எனக் கூறிய அவர், “எமது ஆட்சியிலே பொருளாதார புரட்சியானது மட்டக்களப்பு மக்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும் கிடைக்குமென்பதை உறுதியளிக்கின்றேன்” என்றார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில், மட்டக்களப்பு - கல்லடியில் நேற்று (29) மாலை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, இங்கு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, “நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கல்முனை வடக்குத் தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவோம் என நாங்கள் உறுதி மொழிவழங்குகின்றோம். அத்துடன், காணிகளுக்கு உரித்தான உரிமம் இல்லாது விவசாயம் மேற்கொண்டுவருகின்ற விவசாயிகளுக்குக் காணி உரிமத்தைப் பெற்றுத்தருவோம்” என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன் (கருணா அம்மான்), வட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.வரதராஜப்பெருமாள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் உட்படப் பலர் இதில் கலந்துகொண்டார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
46 minute ago
1 hours ago
3 hours ago