Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தை, எவ்வித பாகுபாடுமின்றி அபிவிருத்தி செய்து வருவதாக, என மேல்மாகாண, மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
60.5 மில்லியன் ரூபாய் செலவில், மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு தனியார் பஸ் தரிப்பு நிலையம், நேற்று (12) மேல்மாகாண, மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்கவால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஒரு காலத்தில், பசுமை நிறைந்ததாக செழித்து விளங்கிய கிழக்கு மாகாணம் இன்று பின் தங்கிய நிலையில் இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்றும் அதற்கு காரணம் இன்று மேல் மாகாணத்தை நோக்கித்தான் அனைத்து அபிவிருத்திகளும் செல்கின்றன என்றும் கூறினார்.
இந்த மட்டக்களப்பிலிருந்து வங்காள விரிகுடா கடல் பகுதியில் அண்மித்துள்ள பல நாடுகள் விரைவாக அபிவிருத்தி அடைந்து வருகின்றன என்றும் பங்களாதேஷ், மியன்மார், கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகள் அபிவிருத்தி அடைந்து வருவதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பில் ஒரு சர்வதேச விமான நிலையமொன்றை நிர்மாணித்,து அதனூடாக டாக்கா, கோலாலம்பூர், பேங்கொக் போன்ற நகரங்களுக்கு விமான சேவைகளை ஆரம்பித்தால், அதன் மூலம் இந்தப் பிராந்தியம் பொருளாதார ரீதியாக நிச்சயமாக அபிவிருத்தியடையும் என்றும் அவர் கூறினார்.
எமது நகர அபிவிருத்தி அதிகார சபையின் நோக்கங்களில் ஒன்றுதான் திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு வரைக்கும் மட்டக்களப்பிலிருந்து அம்பாறை வரையும் தம்புள்ள வரையுமாக இந்தப் பகுதியை அபிவிருத்தி செய்து முக்கிய அபிவிருத்தி திட்டங்களை அமைத்து அதே போன்று திருகோணமலை மட்டக்களப்பு வீதியை காலி வீதி போன்று அபிவிருத்தி செய்வதுதான் எமது நோக்கமாகும் என்றும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
6 hours ago
6 hours ago