2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள்

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீட்

கிழக்கு மாகாணத்தில் காணி அனுமதிப்பத்திரம் இதுவரை பெற்றுக்கொள்ளாத பாடசாலைகளுக்கு, காணி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான விவரங்கள், கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சால் திரட்டப்படுகின்றன.

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டாவின் வழிகாட்டலின் பேரில், வலயக் கல்வி அலுவலகங்கள் இந்தத் தகவல்கள் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

பாடசாலையின் பெயர், முகவரி, கிராம உத்தியோகத்தர் பிரிவு, பிரதேச செயலகப் பிரிவு, காணியின் பரப்பு, நிலஅளவைப் படம் இருந்தால் அதன் இலக்கம் என்பன போன்ற விவரங்கள் தற்போது திரட்டப்படுகின்றன.

இதனை அடிப்படையாகக் கொண்டு, காணி அனுமதிப் பத்திரம் இல்லாத பாடசாலைகளுக்கு காணி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.

இது தொடர்பில் மேலதிக விவரம் தேவைப்படின், கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளருடன் தொடர்புகொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X