Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 08 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக், தீஷான் அஹமட், அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன் கியாஸ், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஏ.எம்.ஏ.பரீத், பொன்ஆனந்தம்
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் முன்பள்ளிப் பாடசாலைகளின் ஆசிரியர்களாக சுமார் 4,500 பேர், கிழக்கு மாகாண சபையின் கல்வியமைச்சின் நியமனத்துடன், கடமையாற்றி வருகின்றனர்.
இவ் ஆசிரியர்களுக்கு கடந்த 8 வருடங்களுக்கு மேலாக 3,000 ரூபாய் வீதம் மாதாந்த சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.
இச்சம்பளம், தமக்குப் போதாதென, முன்பள்ளி ஆசிரியர்கள், ஆளுநருக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, இவ் ஆசிரியர்களின் மாதாந்த சம்பளத்தை 1,000 ரூபாயால் உயர்த்தி வழங்க, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மாகாணக் கல்வியமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மாகாணக் கல்வியமைச்சு, திறைசேரி, நிதியமைச்சு போன்றவற்றுடன் கலந்துரையாடியதன் பின்னர், அனைவரினதும் இணக்கத்துடன், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் 4,000 ரூபாயாக வழங்கப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
46 minute ago
2 hours ago
3 hours ago