2025 மே 23, வெள்ளிக்கிழமை

குப்பை அகற்றும் வாகனங்கள் குப்பைகளுடன் நிற்கின்றன

Editorial   / 2017 செப்டெம்பர் 19 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.எச்.ஏ. ஹுஸைன், வடிவேல் சக்திவேல், எஸ்.பாக்கியநாதன் 

நகரத் தெருக்களின் முக்கிய இடங்களில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை, தனது கழிவகற்றும் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு சென்ற மட்டக்களப்பு மாநகர சபை, அந்த வாகனங்களை   குப்பைகளுடன், மாநகர சபையின் முன்னால் நிறுத்தி வைத்துள்ளது.  

குப்பைகளுடன், மாநகர சபையின் முன்னால் நிறுத்தி வைத்துள்ளது.   மட்டக்களப்பு திருப்பெருந்துறை திண்மக் கழிவு நிலையத்தில் கழிவுகளைக் கொட்ட முடியாது என்று, நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்தே, மட்டக்களப்பு மாநகர சபை இவ்வாறு செய்துள்ளதாக அறியமுடிகிறது. 

இதுபற்றி மாநகர ஆணையாளர் வெள்ளக்குட்டி தவராஜாவிடம் நேற்று ( 18) வினவியபோது, “வேறு வழியின்றி, நகரைச் சுத்தப்படுத்த வேண்டிய தேவை உள்ளதால், மாநகரின் மக்கள் நடமாடும் முக்கிய இடங்களில் தேங்கிக் கிடந்த குப்பைகளை வாகனங்களில் அகற்றிக் கொண்டு வந்து, ஒதுக்குப்புறமாக நிறுத்தி வைத்துள்ளோம். 

இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வரை, வேறு காணிகளில் மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்காத இடங்களில் நகரக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். 

பிரதேச மக்களின் சுற்றுச் சூழல் சுகாதாரம், மற்றும் நகரைத் தூய்மையாக வைத்திருத்தல் ஆகிய விடயங்களில் மாநகர சபையுடன் சேர்ந்து மக்களும் புரிந்துணர்வுடனும் அக்கறையுடனும் செயற்பட வேண்டும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X