Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் திறமையாகச் செயற்பட்ட பொலிஸாரைக் கௌரவிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பில் நேற்று (03) நடைப்பெற்றது.
மாவட்டத்தின் 12 பொலிஸ் பிரிவுகளிலுள்ள பொலிஸ் நிலையங்களின் ஊடாக போதைப்பொருள் தடுப்பு, குற்றத்தடுப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு திறமை காட்டிய 60 பொலிஸ் உத்தியோத்தர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் வெகுமதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கபில ஜெயசேகர, “பொலிஸார் மீது மக்கள் நம்பிக்கை வைக்கும் அளவுக்கு, பொலிஸார் நடந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அத்துடன், “பொலிஸ் நிலையங்களுக்கு, தமது பிரச்சினைகளைக் கொண்டுவரும் மக்களுடன், பொலிஸார் சரியாகப் பேசி, பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பவர்களாகவும், பாரபட்சமின்றியும், பக்கச்சார்பின்றியும் தமது கடமைகளைச் செய்பவர்களாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் பொலிஸார் மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள்” என்றும் தனது உரையில் தெரிவித்தார்.
தொடர்ந்தும், “குற்றச் செயல்களையும், சமூக சீரழிவுகளையும் குறைப்பதில் பொலிஸாரின் பங்கு முக்கியமாகும். அதற்கு பொதுமக்களின் உதவி மற்றும் பொலிஸ் சமூக ஒருங்கிணைப்புக் குழுக்களின் உதவி கட்டாயமாகத் தேவைப்படுகின்றது.
“இன்று வெகுமதிகளை பெறும் பொலிஸார் போன்று, அடுத்தடுத்த ஆண்டுகளிலும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களும் தமது சேவையை சிறப்பாக செய்து வெகுமதிகளை பெற வேண்டும். அதனை ஊக்குவிப்பதற்காகவே இவ்வாறான வெகுமதிகள் பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலின்கீழ் வழங்கப்பட்டு வருகின்றன” என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், அரசாங்க அதிபர், மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட, உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், திணைக்களத் தலைவர்கள், சமூக பொலிஸ் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago