2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

குளவிக் கொட்டுக்கு உள்ளான மாணவிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில்

Editorial   / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் வைத்து, குளவிக் கொட்டுக்கு உள்ளான அப்பாடசாலையின் 4 மாணவிகள், தொடர்ந்தும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் தங்கியிருந்து, சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

நேற்று (3), மேற்படி பாடசாலையில் வைத்து, முதலாம் மற்றும் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் 4 சிறுமிகள், குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேற்படி பாடசாலையின் மலசல கூடப் பக்கமிருந்து வந்த குளவிகளே, தம்மைத் தாக்கத் துவங்கியதாகவும், தலைப்பகுதி, உதடு, முகம், கை, கால்கள் என சரீரத்தின் பல பாகங்களிலும், குளவிகள் தம்மைக் கொட்டியதாகவும் அச்சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X