Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மார்க்கப் பிரச்சினைகளையும், கொள்கைப் பிரச்சினைகளையும் அரசியலாக்கி, அதன்மூலம் சமூகத்தில் குழப்பத்தை உண்டு பண்ணுவதற்கு சிலர் முயற்சி செய்வதாக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் குற்றஞ்சாட்டினார்.
காத்தான்குடி, நூறானியா வட்டாரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது,
“கடந்த பொதுத் தேர்தலில் ஏற்படுத்தப்பட்ட சதித்திட்டத்தால், காத்தான்குடிக்கான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்பட்டது. அன்று நான் தோல்வியடையவில்லை; காத்தான்குடி மண்ணே தோற்கடிக்கப்பட்டது.
“கடந்த தேர்தலில், 'ஹிஸ்புல்லா வெற்றி பெற்றால் மஹிந்த பிரதமர் ஆகுவார்' என்று அனைவரும் என் மீது மஹிந்த சாயம் பூசியே பிரசாரம் செய்ந்தனர்.
“அதனால் மக்கள் குழப்பம் அடைந்தனர். இருந்தும் எனக்கும் சுமார் 27ஆயிரம் வாக்குகளை மக்கள் வழங்கினார்கள்.
“தோல்வியடைந்த எனக்கு மைத்திரிபால சிறிசேனவால் தேசியப்பட்டியல் மூலம் இராஜாங்க அமைச்சும் வழங்கப்பட்டது.
“அன்று என்மீது மஹிந்த சாயம் பூசியவர்கள், இன்று 'ஊழல் ஊழல்..' என்று கத்தித்திரிகிறார்கள்.
“அதற்கான பதிலையும் நாங்கள் ஆதாரபூர்வமாக வழங்கியுள்ளோம். ஆனால், நாங்கள் முன்வைத்துள்ள பதிலுக்கு அவர்களால் மாற்றுக் கருத்து வழங்க முடியாது திக்கு முக்காடியுள்ளனர்.
“அதனால் நாங்கள், இஸ்லாத்துக்கு முரணானவர்களோடு தொடர்பு வைத்துள்ளோம் என்று, புதிய புரளியைக் கிளப்புகின்றனர்.
“மார்க்கப் பிரச்சினைகளையும், இயக்கப் பிரச்சினைகளையும், கொள்கைப் பிரச்சினைகளையும் அரசியலுக்கு கொண்டு வரவேண்டிய அவசியம் கிடையாது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
40 minute ago
2 hours ago