Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
கனகராசா சரவணன் / 2018 ஜூன் 09 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு பெரியகல்லாறு பிரதேசத்தில், மலசல கூடம் அமைப்பதற்கான வெட்டப்பட்ட குழியில் இருந்து, ஆண் ஒருவரின் சடலம், இன்று (09) பகல் மீட்கப்பட்டுள்ளது என, களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்
பெரியகல்லாறு பிரதான வீதி கொம்பச்சந்தியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான 48 வயதுடைய, 4 பிள்ளைகளின் தந்தையான இராசதுரை துவேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், நேற்று வெள்ளிக்கிழமை இரவு, வீட்டை விட்டு வெளியேறியச் சென்றிருந்தார் என்றும் இன்று வரை வீடு திரும்பாதமையால், உறவினர்கள் இணைந்து அவரைத் தேடியபோதே, பெரிகல்லாறு கடலாட்சியமன் வீதியில் பின்பக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் மசலக் குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டள்ளா்.
உயிரிழந்தவரின் சடலம், பிரேதபரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .
27 minute ago
33 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
33 minute ago
49 minute ago