2025 மே 19, திங்கட்கிழமை

‘கூட்டமைப்பை சிதைக்கும் முயற்சியில் மஹிந்தவுக்குப் பின் சுரேஷ் களமிறங்கியுள்ளார்’

எஸ்.கார்த்திகேசு   / 2018 ஜனவரி 17 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைக்கும் வகையில்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல சதிகளை செய்து தோல்வி கண்ட நிலையில், இன்று அக்கட்சியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கட்சியை விட்டு விலகிச் சென்று கூட்டமைப்பைப் பிளவுபடுத்தவதற்கான செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார். இதற்கு காரணம், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கட்சி அவருக்கு வழங்கவில்லை என்பனாலே ஆகும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொத்துவில் தொகுதி உப செயலாளர் த.தவராஜா தெரிவித்தார்.

 

திருக்கோவில் பிரதேசத்தில், நேற்று (16) மாலை இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களை தெளிவூட்டும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுத் தருவதாக கூறும் இவர்கள், தமிழ் மக்களின் உரிமையை விட தங்களில் சுயநலங்களிலேயே அதிக கருசணையாக இருக்கின்றனர். தனக்கு கால் போனாலும் பரவாயில்லை, கூட்டமைப்பக்கு சகுனம் பிழையாக இருக்க வேண்டும் என சிந்திப்பவர்தான் இந்த சுரேஷ் பிரேமச்சந்திரன். இந்த வரிசையில் இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் செயற்பட்டு வருகின்றார்.

“முன்னாள் ஜனாதிபதி மொட்டு சின்னத்தில் களமிறங்கி தென்பகுதியில் தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்றை வழங்கக்கூடாது என்ற அடிப்படையில் செயற்படுது போன்றே, சுரேஷ் பிரேமச்சந்திரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும்  செயற்படுகின்றனர். மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இவர்கள் இருவருக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X