2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கேரள கஞ்சா வைத்திருந்த அண்ணன், தங்கை கைது

Editorial   / 2018 மார்ச் 12 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்

 

திருகோணமலை தலைமையகப்  பொலிஸ் பிரிவில் கேரள கஞ்சா வைத்திருந்த அண்ணன், தங்கை இருவர், நேற்று  (11) மாலை  கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகலையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, திருகோணமலை மீன் விற்பனை  நிலையத்துக்கு அருகாமையில் வைத்து  30 வயதுடைய  குடும்பஸ்தர் ஒருவர் முதலில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 01 கிலோவும் 50 கிராமும் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாக  திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரை, திருகோணமலை பிராந்திய  போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸார், திருகோணமலை தலைமையகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, மேலதிக விசாரணையை மேற்கொண்ட போது, அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், அவரது சகோதரி கைதுசெய்யப்பட்டார்.

திருகோணமலை, சீ.வி வீதீயில்  மோட்டார் சைக்கிளொன்றில் சென்று கொண்டிருந்த போதே, தகவல் வழங்கியவரின் சகோதரியான 27 வயதுடைய அப்பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டார்.

இவரிடமிருந்து 580 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாக, தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக  மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையகப்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X