Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேசத்தில் முன்னர் ஆயதக்குழு முகாமாக இருந்த வீடு ஒன்றின் கூரை அண்டசீற்றின் மேல் இருந்து கைக்குண்டுகள் இரண்டை, விசேட அதிரடிப்படையினர் நேற்று (14) மீட்டு, செயலிழக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள 5ஆம் பிரிவு தொம்புதர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர், வெளிநாட்டில் குடும்பமாக இருந்துள்ள நிலையில் குறித்த வீட்டை 2006ம் ஆண்டு ஆயுதகுழு கைப்பற்றி, அவ்வீட்டில் முகாமிட்டு வந்தனர்.
இந்த நிலையில், வீட்டு உரிமையாளர் 2007ஆம் ஆண்டு வந்தபோது அதில் ஆயுதகுழு முகாம் அமைத்துள்ளதையடுத்து பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவித்து, அந்த முகாமில் இருந்து ஆயதகுழு வேளியேறியது.
இதனையடுத்து வீட்டின் உரிமையாளர், வீட்டில் குடிகொண்டு வாழ்ந்துவரும் நிலையில், சம்பவதினமான நேற்று முன்தினம் குறித்த வீட்டை புனர் நிர்மானம் செய்துவரும் நிலையில், கூரையின் ஓடுகளை மாற்ற முற்பட்ட போது அண்டசீற்றில் இரு கைக்குண்டுகள் இருப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து தாண்டியடி விசேட அதிரடிப்படைமுகாம் குண்டு செயலிழக்கும் பிரிவு, நீதிமன்ற உத்தரவை பெற்று குறித்த இரண்டு குண்டுகளையும் நேற்று மீட்,டு செங்கலடி கறுத்தப்பாலம் அருகில் கொண்டு சென்று, செயலிழக்கச் செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
24 minute ago
31 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
42 minute ago
1 hours ago