2025 மே 21, புதன்கிழமை

கைதிகளால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 நவம்பர் 12 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளால் டெங்கு ஒழிப்பு சிரமதான நடவடிக்கை, மட்டக்களப்பில் இன்று (12) முன்னெடுக்கப்பட்டது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அனுமதியுடன், மட்டக்களப்பு சிறைச்சாலையின் அனுசரனையுடன், சிறைச்சாலை நலன்புரி அமைப்பின் ஆதரவுடன், மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இந்த டெங்கு ஒழிப்பு சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கே.எம்.யு.எச்.அக்பரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபையின் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதர ஊழியர்கள் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கைதிகளின் பங்களிப்புடன், இந்தச் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையின் வடிகான் மற்றும் அக்கலாசாலையில் அடையாளப்படுத்தப்பட்ட சில பகுதிகள் என்பன இதன்போது துப்பரவு செய்யப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X