2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கோர விபத்தில் இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி

Freelancer   / 2023 ஏப்ரல் 05 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - ஏறாவூர், கொம்மாதுறை பகுதியில் பிற்பகல் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  சிறுவன் உட்பட  5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த விபத்தில் செங்கலடி - ஐயங்கேணி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த  28 வயதுடைய க.திபாகர் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

21 வயதுடைய இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 10 வயது சிறுவன்  அடங்களாக 4 பேர் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

செங்கலடி பகுதியில் இருந்து கொம்மாதுறை பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில்  சென்ற இரு  இளைஞர்கள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் எதிர் - அருகே வந்த மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது தொடராக மோதியுள்ளனர்.

இதன் போது சம்பவ இடத்திலேயே  மோட்டார் சைக்கிளில் வந்த 28 வயதான இளைஞன்  உயிரிழந்துடன் ஏனையவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பிரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை  ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .