2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கோவில் நிர்வாகத்தால் நிவாரணம் வழங்கிவைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, தினக்கூலிக்குச் செல்லும் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிய நிலையில், அவர்களுக்கான உலர் உணவுப்பொதிகளை, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோவில் நிர்வாக சபை வழங்கியுள்ளது.

இதன்படி, அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய ஒரு தொகுதி நிவாரண பொருள்களை, வவுணதீவு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செலாளர் திருமதி சுவா சதாகரனிடம் இன்று (02) கையளித்தனர்.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கொவில் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  கோவில் தலைவர் பூபாலப்பிள்ளை சுரேந்திரராசா,  செயலாளர் இளையதம்பி சாந்தலிங்கம், பொருளாளர் பாலிப்போடி சபாரெத்தினம் உள்ளிட்ட நிர்வாக சபையினரும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X