2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கைக்குண்டு மீட்பு

Princiya Dixci   / 2015 நவம்பர் 07 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேத்தாழை முருகன் ஆலயத்துக்கு அருகிலுள்ள நீரோடையிலிருந்து கைக்குண்டு, நேற்று வெள்ளிக்கிழமை (06) மாலை மீட்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் பெய்யும் அடைமழை காரணமாக நீர் ஓடைகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதன் காரணமாக சிறுவர்கள் சிலர் குறித்த பிரதேசத்திலுள்ள நீரோடையில் மீன்பிடித்து விளையாடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ஓடையின் அருகில் காணப்பட்ட மண் நீர் அலையின் தாக்கத்தினால் அரிப்புக்குள்ளாகி காணப்பட்டுள்ளது.

இதன்போது மர்மப்பொருளொன்று காணப்படுவதனைக் கண்டு, அதனை எடுத்து பார்வையிட்ட பின்னர் பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர்,  பெற்றோர்கள் கல்குடா பொலிஸாருக்கு தகவல் வழங்கியமையினையடுத்து பொலிஸார் அதனை மீட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X