Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Kanagaraj / 2015 டிசெம்பர் 12 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்..சபேசன்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் பணத்திற்கோ சலுகைக்கோ சோரம்போனவர்கள் அல்லர் இலட்சியத்துக்காகவும் தமிழ்மக்களின் உரிமைக்காகவும் அந்த உரிமைகிடைக்கும்வரைப் போராடிக்கொண்டிருப்போம், தமிழர்களுக்கான சுயநிர்ணயத் தீர்வு கிடைக்கும்வரை தமிழத் தேசியக் கூட்டமைப்பின் போராட்டம் ஓயாது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த. கலையரசன் தெரிவித்தார்
நாவிதன்வெளி வேப்பையடி வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை (12), அவசரசிகிச்சைப்பிரிவு கட்டடத்திறப்பு விழா வைத்தியர் திருமதி சித்தி ஜாயிசா அனீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழர்களின் பூர்வீக இடங்கள் மற்றும் வைத்தியசாலைகளும் பேரினவாத தீய சக்திகளால் கடந்தகாலங்களில் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டன. நாவிதன்வெளி வேப்பையடி வைத்தியசாலை 1983 ஆண்டுக் காலப்பகுதியில் பல வசதிகளுடனும் இயங்கிவந்த நிலையில் திட்டமிட்டு விசமிகளால் குண்டுவைத்து தகத்தெறியப்பட்ட சம்பவம் இன்னும் எமது மக்கள் மனங்களில் இருந்து அகலவில்லை.
நாவிதன்வெளிப்பிரதேசம் அன்று அரசியலில் அனாதரவற்ற பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டது இன்றுதான் ஓரளவுக்கு முன்னேற்றம்கண்டு வருகின்றது.
அன்று பல அதிகாரிகளுடனும் அமைச்சருடனும் இந்த வைத்தியசாலை தொடர்பாக கதைத்தது மட்டுமல்லாது அவர்களை அழைத்துவந்து நிலைமையினைக் காட்டியும் சரியான எந்தத்தீர்வும் கிடைக்கப்பெறாத நிலையில் தற்போது கல்முனை பிராந்திய வைத்திய அதிகாரி நல்லதோர் தீர்மானம் எடுத்து இவ்வைத்தியசாலைக்கு பொருத்தமான வைத்தியரை நியமித்தமை இம்மக்களுக்கு செய்த பெரும் உதவியாகும்.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச்சேர்ந்த பலமக்களின் தேவையை நிறைவேற்றக்கூடிய வேப்பையடி வைத்தியசாலையானது அரசியல் பழிவாங்கலாலும் சில அரசியல்வாதிகளின் சுயநலப்போக்கினாலும் கடந்தகாலங்களில் தரம் உயர்ந்தப்படாது மழுங்கடிக்கப்பட்டுவந்ததை மறந்துவிடமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
டந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பலரை அழைத்து இந்தவைத்தியசாலையின் நிலைமையினை எடுத்துக்கூறியிருந்தேன், ஆனால், என்னை கடந்த ஆட்சியில் இருந்த அரசாங்கப் பக்கம் கட்சி தாவுமாறும் அப்போதுதான் இவ்வைத்தியலையினை தரமுயர்த்தி வசதிவாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதாக தெரிவித்தனர்.
ஆனால், கட்சிதாவி தமிழ் மக்களுக்கு நான் துரோகம்செய்யப் போவதில்லை என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன் இதனால் வேப்பையடி வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்யாது புறம்தள்ளிவந்த நிலையில் புதிதாக பதவிபிரமாணம் செய்துகொண்டுள்ள அமைச்சர் இவ்வைத்தியசாலையின் தேவையினை நிறைவு செய்வார் என எமக்கு நம்பிக்கை இருக்கின்றது.
நாவிதன்வெளிப்பிரதேசம் ஆரம்பக்குடியேற்றக்கிராமமாக இருந்தாலும் மக்கள் தங்களது தேவைகளைப்பெறுவதற்காக கல்முனைக்குச்செல்லவேண்டியவர்களாக இருக்கின்றனர். ஆனால், கடும்மழைபெய்து வெள்ளம் ஏற்பட்டால் எவ்வழியாலும் செல்லமுடியாதநிலை ஏற்படும் அவ்வாறான சந்தர்ப்பத்தில் பல உயிரிழப்புக்கள் இடம்பெறுவது வழமை இதனை இல்லாமல்செய்வதற்கு இவ்வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்வது காலத்தின்தேவையாகும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
1 hours ago