2025 மே 06, செவ்வாய்க்கிழமை

காட்டு யானையின் அட்டகாசம்: 2 வீடுகள் சேதம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வட்டியாமடு கிராமத்தில், திங்கட்கிழமை (12) அதிகாலை காட்டுயானையொன்று நுழைந்து இரண்டு வீடுகளை தாக்கியுள்ளதுடன் 10 தென்னை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

மேலும், குறித்த வீட்டில் வைக்கப்பட்ருந்த 10 நெல்மூட்டைகளையும்  தின்றுவிட்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர், காட்டுயானை தாக்கிய வீட்டை கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  மார்க்கண்டு நடராசா பார்வையிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் காட்டுயானையை பிடித்து, யானைகள் சரணாயலத்தில் ஒப்படைப்பதற்கான  நடவடிக்கைகளையும் யானை பாதுகாப்பு வெடிகளை வழங்கவும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, பட்டிப்பளை பிரதேச செயலாளருக்கும் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறு;பிபனர் மார்க்கண்டு நடராசா தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X