2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கொட்டில் உடைந்ததில் வயோதிபர் காயம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மழையுடன் கூடிய   கடும் காற்றினால் தற்காலிகக் கொட்டில் உடைந்து விழுந்ததில், அதில் உறங்கிக்கொண்டிருந்த வயோதிபர் படுகாயமடைந்த நிலையில் வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோறளைப்பற்று வடக்கு அபிவிருத்தி ஒன்றியத்தில் காவலாளியாக கடமையாற்றுகின்ற கண்டலடி வாகரையைச் சேர்ந்த க.கந்தசாமி (வயது 63) என்பவரே படுகாயமடைந்துள்ளார். இதில் படுகாயமடைந்த வயோதிபர் சத்தம் இட்டதினால் அயலவர்கள் வந்து  அவரை  வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X