Thipaan / 2015 நவம்பர் 07 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பெருந்துறை பகுதியிலுள்ள கிணறொன்றிலிருந்து 16 வயது சிறுவனொருவனின் சடலம், இன்று (07) காலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
திருப்பெருந்துறை அன்னை வேளாங்கன்னி வீதியில் அமைந்துள்ள குறித்த கிணற்றிலிருந்தே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 5ஆம்திகதி வீட்டிலிருந்து சென்ற இச்சிறுவன் வீடுதிரும்பாத நிலையில் இன்று கிணற்றிலிருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சிறுவன் மனவளர்ச்சி குன்றியவர் என பிரதேச கிராம சேவை அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
5 minute ago
8 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
15 minute ago