2025 மே 06, செவ்வாய்க்கிழமை

காணாமல்போன மாணவியைக் கண்டுபிடிக்கக் கோரி பேரணி

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலை நகர்க் கிராமத்தில் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன மாணவியைக் கண்டுபிடிக்கக் கோரி கல்குடா உலமா சபையின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகையின் பின்னர் பேரணி இடம்பெற்றது.

இம்மாணவி காணாமல்போய் இரண்டரை வருடங்களாகியபோதிலும், அம்மாணவி பற்றிய எந்தவித தகவலும் இதுவரையில் கிடைக்கவில்லை.

27.03.2013 அன்று பாடசாலைக்குச் சென்றவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை. இவரைத் தேடியபோதிலும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கல்குடா உலமா சபையிடம் பெற்றோர் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு கையளிப்பதற்கான மகஜரும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர்  நிஹாரா மௌஜூத்திடம் ஏற்பாட்டாளர்கள் கையளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X