Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 09:22 - 1 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
அம்பாறை,காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் செயலாளரான ஆத்மீகவாதி கு.ஜெயராஜி மனித உரிமைகள் ஸ்தாபனத்தின் அனுசரணையில் தென்னாபிரிக்காவின் தலைநகரான ஜொகன்னஸ்பேர்க்கிற்கு சென்று பயிற்சிக் கருத்தரங்கில் கலந்துகொண்டு இலங்கையின் சமூக நீதி தொடர்பான விளக்கவுரையினை நிகழ்த்தியதை கௌரவிக்கும் வகையில் காரைதீவு இந்துசமய விருத்திச் சங்கம் மற்றும் காரைதீவின் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் பாராட்டுவிழா நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் காரைதீவு இராமகிருஷ்ண சங்க பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது.
காரைதீவு இராமகிருஷ்ண சங்க பெண்கள் வித்தியாலய அதிபர் செ.மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதமஅதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந் கலந்துகொண்டார்.
இதன்போது,ஆசியுரையினை பிரம்மஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் (போசகர் இச்துசமய விருத்திச் சங்கம் , காரைதீவு) நிகழ்த்தினார்.
மேலும், ஆத்மீகவாதி கு.ஜெயராஜி பொது அமைப்புக்கள் மற்றும் ஆலைய தர்மகர்த்தாகளினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
சா.கந்தசாமி Friday, 11 December 2020 01:37 PM
வாழ்த்துக்கள் ஜெயராஜ் , சேவை தொடரட்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago