2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கிராம அலுவலரை மாற்றக் கோரி மகஜர் கையளிப்பு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்,.தவக்குமார்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமம் ஒன்றின் கிராம அலுவலரை இடமாற்றம் செய்யுமாறு கோரி அக்கிராமத்து மக்கள் நேற்று வியாழக்கிழமை (29) பிரதேச செயலாளர் மற்றும் பெரும்போக ஆரம்பக் கூட்டத்துக்கு வந்திருந்த அரசியல்வாதிகளிம் மகஜரைக் கையளித்தனர்.

குறித்த கிராம அலுவலர் மக்களுக்கான கடமையை சரியான முறையில் செய்வதில்லை,  மக்களின் விருப்பமின்றி வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்களை நீக்கம் செய்கின்றார் எனக் கூறியதுடன், குறித்த கிராம அலுவலரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் பின்னர் பொதுமக்கள், பிரதேச செயலாளரிடம் மகஜரைக் கையளித்தனர். இது பற்றிய விசாரணையின் பின்னர் இவரின் இடமாற்றம் பற்றி தான் முடிவெடுப்பதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X