2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

காலத்தை இழுத்தடிக்காமல் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கவேண்டும்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

'காலத்தை இழுத்தடிக்காமல் மாகாணசபையும் மத்திய அரசும் இணைந்து வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் முறையான திட்டம் ஒன்றை வகுக்கவேண்டும்' என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்கள் அரச சேவையில் தம்மை இணைத்துக்கொள்ள நடவடிக்கையெடுக்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்;கிழமை காலை முதல் தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு காந்திப்பூங்காவுக்கு அருகில் ஆரம்பமான இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் இவர்களை நேற்று வியாழக்கிழமை மாலை  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுடன் கலந்துரையாடினார்.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது 1400க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உள்ளனர். வருடாந்தம் பட்டததாரிகள் உருவாகிக் கொண்டுவருகின்றனர்.

கிழக்கு மாகாணசபையை பொறுத்தவரையில் வேலையற்ற நிலையில் உள்ள பட்டதாரிகளின் நலன் தொடர்பான எந்த நிரந்தர திட்டமும் இதுவரையில் இல்லை.

மத்திய அரசாங்கமானது வருடாந்தம் வெளிவரும் பட்டதாரிகளின் நலன்கள் தொடர்பில் பல செயற்றிட்டங்களை முன்னெடுத்தபோதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்டவாறு 2015ஆம் ஆண்டு பட்டதாரிகளுக்கு எந்தவித நியமனங்களையும் வழங்கவில்லை.

மத்திய அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற நிலையில் உள்ளவர்களுக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும்' என்று கோரினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X