Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூரில் குளவிக் கொட்டுக்குள்ளான மாணவியொருவர் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சவுக்கடி கிராமத்தைச் சேர்ந்த தவபாலன் வினோஜினி (வயது 16) என்ற மாணவி, புதன்கிழமை (09) பகல் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இந்நிலையில், காட்டுப்பகுதியில் கருங்குளவிகள் இம்மாணவியை கொட்டியுள்ளன.
உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இம்மாணவி, மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி இம்மாணவி உயிரிழந்துள்ளார்.
ஏறாவூர் கலைமகள் வித்தியாலயத்தில் இம்மாணவி கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
21 minute ago
35 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
35 minute ago
4 hours ago
4 hours ago