2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கிழக்கின் முதலாவது ஒட்டிசம் பாடசாலை திறந்து வைப்பு

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

கிழக்கு மாகாணத்தின் முதலாவது ஓட்டிசம் (தற்சிந்தனையாளர்) பாடசாலை மட்டக்களப்பில் இன்று (08) காலை திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு கோவிந்தன் வீதியிலுள்ள இப்பாடசாலையை, சுகாதார அமைச்சின் சுகாதாரப் சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

சுகாதார அமைச்சின் அங்கிகாரத்துடன், அமெரிக்க நிறுவனமொன்றினால் 3 மில்லியன் செலவில், இப்பாடசாலை திறந்து வைக்கப்பட்டது.

முதல் கட்டமாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் இதில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை, மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப், மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ண மிசன் தலைவர் பிரபு பிரேமானந்தாஜீ உட்பட வைத்தியதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .