2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 21ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா மட்டக்களப்பு, வந்தாறுமூலை வளாகத்தில் அமைந்துள்ள நல்லையா மண்டபத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது என  அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.

இப்பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு, வந்தாறுமூலை, திருகோணமலை ஆகிய வளாகங்களைச் சேர்ந்த உள்வாரி மற்றும் வெளிவாரிப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களே  பட்டம் பெறவுள்ளனர்.

நான்கு அமர்வுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.

கலை, கலாசாரப்பீடம், சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானபீடம், சித்த மருத்துவ கற்கைகள் பிரிவு, வணிக முகாமைத்துவப்பீடம், விவசாயபீடம், தொடர்பாடல் மற்றும் வியாபார கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞானபீடம், சுவாமி விபுலானந்தா அழகிய கற்கைகள் நிறுவனம் ஆகியவற்றில் பட்டப்படிப்பை  பூர்த்தி செய்தவர்களுக்கே பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.

கலை, கலாசாரத்துறையில் 450 பேரும் வைத்தியத்துறையில் 50 பேரும் விவசாயத்துறையில் 11 பேரும் சித்த மருத்துவத்துறையில் 10 பேரும் உட்பட மொத்தமாக 852 பேர்  பட்டம் பெறவுள்ளனர் எனவும் அவர் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .