2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்க நடவடிக்கை

Niroshini   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தியை நோக்காக கொண்டு, எதிர்காலத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு அதிகளவு நிதியை ஒதுக்குதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப விஞ்ஞான பீடங்கள் திறந்துவைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ், மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப விஞ்ஞான பீடத்தை செவ்வாய்க்கிழமை(02) திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்லூரி அதிபர் கே .அருள்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தொடர்ந்து உரையாற்றிய அவர்,

வெளியில் இருந்து இந்த கிழக்கு மாகாணத்தை  பார்க்கும் போது மிக அழகாக இருக்கிறது. ஆனால், இங்கு வந்து பார்த்த பிறகுதான், கிழக்கு மாகாணத்தில் பல்வேறு குறைபாடுகள்  இருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. பாடசாலை கட்டடங்கள் குறைபாடுகள் , பௌதீக வளக் குறைபாடுகள், ஆசிரியர் பற்றாக்குறைகள் காணப்படுகின்றன.
நகர்புற பாடசாலைகளை  பார்கின்றபோது, மட்டக்களப்பு நகர் பாடசாலைகளிலும் பல குறைபாடுகள் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

இக்குறைபாடுகளை கட்டம் கட்டமாக தீர்க்க வேண்டிய நிலை இருக்கின்றது. எதிர்கால மாணவ சந்ததிகளுக்கு  கல்வி சமூகத்துக்கு தேவையானவற்றை செய்ய வேண்டிய  பொறுப்பு இந்த புதிய அரசாங்கத்துக்கு இருக்கின்றது என்றார்.

'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்  இணைந்து நாட்டை  முனேற்றகரமான பாதையில் கொண்டு செல்வதை அவதானிக்ககூடியதாக உள்ளது.

அந்தவகையில், இந்த முன்னேற்றகரமான பாதைக்கு போக வேண்டும் என்றால், இந்த நாட்டினுடைய கல்வி வளர்ச்சியை முதலில் கொண்டு வரவேண்டும். அதை உணர்ந்தவர்களாக இருவரும் கல்வி வளர்ச்சியை கொண்டு வருவதற்காக பல மாற்று திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றார்கள்.

அதில் மிக முக்கியமான அம்சமாக, தொழில்நுட்ப கல்வி அல்லது தொழில்சார்ந்த கல்விகளை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது கட்டாய திட்டமாக இருக்கிறது' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X