Gavitha / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மேசையில் கிடந்த குண்டூசியை விழுங்கிய 4 வயது குழந்தை, மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த குழந்தையே, இவ்வாறு குண்டூசியை விழுங்கி பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குழந்தை குண்டூசியை விழுங்கியதைக் கண்ட பெற்றோர், குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்தாகவும், விழுங்கிய குண்டூசி, குடலில் நிலைக்குத்தாக இருப்பதாகவும் எக்ஸ்ரே பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
குழந்தைக்கு, இயற்கையான முறையில் மலத்துடன் குண்டூசியை வெளியேற்றுவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago