2025 மே 07, புதன்கிழமை

குழு நியமனம்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 20 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறு கைத்தொழில்களையும் அவற்றின்   முயற்சியாளர்களையும்  மேம்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக அம்மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸினால்  குழுவொன்று  நியமிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு சிறு கைத்தொழில் மேம்பாட்டின் முக்கியத்துவம் பற்றி ஆராயப்பட்டதுடன், இது தொடர்பான நடவடிக்கைகளை விரைந்து  மேற்கொள்ளவும் முடிவு எடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X