2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காவலில் ஈடுபடாத காவலாளிகளுக்கு எதிராக நடவடிக்கை

Gavitha   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குப்பட்ட பாடசாலைகள் மற்றும் கோட்டக்கல்வி அலுவலகங்களில் கடமை நேரத்தில் கடமையில் ஈடுபடாத காவலாளிகள் மூவர் மீது நடவடிக்கையெடுக்கவுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்தார்.

இரவு நேரத்தில் காவலாளிகள் கடமையில் ஈடுவதில்லை என்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் பின்னர், கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில், பாடசாலை மற்றும் கோட்டக்கல்வி அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஸ்ண மிசன் பாடசாலை, வந்தாறுமூலை கணேஷா வித்தியாலயம் மற்றும் ஏறாவூர்பற்று 2 கோட்டக்கல்வி அலுவலகம் ஆகியவற்றின் காவலாளிகள் கடமையில் ஈடுபடவில்லை என்று இந்தச் சோதனையின் மூலம் தெரியவந்தது.

இவர்கள் கடமையில் ஈடுபடாதமைக்கான காரணங்களை இன்று செவ்வாய்க்கிழமை (23) சமர்ப்பிக்குமாறு இன்றைய தினம் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X